Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மோனோ ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

மோனோ ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது

Share:

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் நேற்று பிற்பகலில் ராட்சஷ மரம் ஒன்று வேரோடு பெயர்ந்துக்கொண்டு சாய்ந்ததில் பாதிக்கப்பட்ட மோனோரயில் சேவை, இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் வழக்க நிலைமைக்கு திரும்பியதாக அதனை நிர்வகித்து வரும் ரேபிட் ரயில் Sdn. Bhd. நிறுவனம் அறிவித்துள்ளது.

மோரோ ரயில் இருப்புப்பாதையில் சிதறிக்கிடந்த மரக்கிளைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ரயில் இருப்புப்பாதை சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று மாலையில் அச்சேவை வழக்கத்திற்கு திரும்பியுள்ளதாக அந்த ரயில் நிறுவனம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருப்புப்பாதையில் பரீட்சார்த்த ஓட்டம் நடத்தபட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பபட்ட பின்னரே மோனோ ரயில் சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதாக ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்