கோலாலம்பூர், நவம்பர்.13-
கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டலில் இறந்து கிடந்த தைவானைச் சேர்ந்த பிரபல ஊடகப் பிரபலமான பெண் ஒருவர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாட்டின் ராப் பாடகர் Namewee இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று தொடங்கி, வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை அந்த பாடகர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
31 வயதுடைய அந்த தைவான் பெண்ணின் சவப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த பெண், இறப்பதற்கு முன்பு அவரை கடைசியாக பார்த்த நபர் அந்த ராப் பாடகர் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.








