இராணுவ வீரர்கள் சென்ற வாகனம், சாலையைவிட்டு விலகி பாதாளத்தில் கீழே விழுந்ததில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 9.50 மணியளவில் தாப்பா – கேமரன்மலை சாலையில் 13 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
23 மற்றும் 28 வயதுடைய அந்த இரண்டு வீரர்கள் புரோடுவா மைவி காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்டடனர்.
அந்த இரண்டு வீரர்கள் பயிற்சிக்காக கேமரன் மலையிலிருந்து தைப்பிங்கிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


