May 22, 2026
Thisaigal NewsYouTube
உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் பணம் மோசடி
தற்போதைய செய்திகள்

உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் பணம் மோசடி

Share:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேரா மாநில உடல் ஊனமுற்றோர் புனர்வாழ்வு சங்கத்திற்கு சொந்தமான 4 லட்சத்து 92 ஆயிரத்து 474 வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக அச்சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு ஈப்போ செஷன்ஸ நீதிமன்றம் இன்று மூன்று நாள் சிறைத் தண்டனை மற்றும் 80 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

கமருல்ஜமான் அப்துல்லா என்ற 65 வயதுடைய அந்த முன்னாள் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி இப்ராஹிம் ஒஸ்மான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈப்போ, கூனோங் ராபாட் மேபேங் கிளை அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News