கோலாலம்பூர்,ஜன.30
கடந்த ஆண்டு டிக்டோக் வீடியோ வாயிலாக பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம்மைக் கொலை செய்து விடுவதாக மிரட்டிய 35 வயது ஃபைசால் முஹமாட்டிற்கு செஷன் நீதிமன்றத்தில் 6 மாதங்கள் சிறை தண்டனையை விதித்தார் நீதிபதி என்.ப்ரிசில்லா ஹெமாமாலினி.
நீதிமன்றத்ஹில் குற்றச்சாட்டை வாசிக்கும்போது ஃபைசால் முஹமாட் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
நாட்டின் 10வது பிரதமரையும் இதர அமைச்சர்களை கொலை செய்யும் எவெரேனும் தன்னிடம் இருந்து 5 மில்லியன் வெள்ளி சன்மானமாகப் பெறுவார்கள் என டிக்டோக் காணொலியில் ஃபைசால் முஹமாட் தெரிவித்திருந்தார்.
அவ்விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.








