May 22, 2026
Thisaigal NewsYouTube
வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருந்த மேலும் நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருந்த மேலும் நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் 7 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு லாரிகளை சோதனையிடமால் 39 ஆயிரத்து 800 வெள்ளி லஞ்சம் வாங்கியது தொடர்பில் சுங்கத்துறையை சேர்ந்த மேலும் நான்கு அதிகாரிகள் இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

48 வயது அலியாஸ் மாட் யூசோவ், 43 வயது முகமது ரிசல் ஓத்மான், 39 வயது முகமது ஷரில் முகமட் சுகைமி மற்றும் முகமது ஹனாஃபி சே மாட் என்ற அந்த நான்கு அதிகாரிகளும் 38 வயதுடைய நிறுவன உரிமையாளரிடமிருந்து லஞ்சம் பெற்று வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, வெளியேறும் லாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிடாமல் இருப்பதற்கு இந்த நால்வரும் கையூட்டு பெற்று வந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

Related News