Jul 15, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திருத்தம் அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவில்லை: நாடாளுமன்றத்தில் தியோ நீ சிங் விளக்கம்
தற்போதைய செய்திகள்

சட்டத்திருத்தம் அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவில்லை: நாடாளுமன்றத்தில் தியோ நீ சிங் விளக்கம்

Share:

1998-ஆம் ஆண்டு முதல் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இருந்து வருவதால், புதிய சட்டத்திருத்தம் அமைச்சருக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங் விளக்கமளித்துள்ளார். மாறாக, நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவராக நியமிக்கப்படுவதைத் தடுப்பதன் மூலம் அரசியல் தலையீடுகள் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், எம்.சி.எம்.சி தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை முற்றிலும் அமைச்சரின் கைகளிலேயே இருப்பதால், இந்த அமைப்பு எவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அகமட் ஃபத்லி ஷாரி கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ளது போல பொது விசாரணை அல்லது நாடாளுமன்றக் குழுவின் கண்காணிப்பு ஏன் மலேசியாவில் இல்லை என்றும், தற்போதைய திருத்தம் ஒரு வெளிப்பூச்சு மட்டுமே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Related News