Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு ஆளுநரின் பிறந்த நாள்: பிரமுகர்கள் கெளரவிப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கு ஆளுநரின் பிறந்த நாள்: பிரமுகர்கள் கெளரவிப்பு

Share:

பினாங்கு மாநில ஆளுநர், துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா ஹாஜி ராம்லி ஙா தாலிப் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள், கடந்த ஜுலை 11 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசியல், சமூகவியல் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பிரமுகர்கள் என 1,221 பேருக்கு பல்வேறு விருதுகள் மற்றும் பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு உட்பட பினாங்கு அரசு நிர்வாகப் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தர்.

இம்முறை விருது மற்றும் பட்டங்கள் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியர்கள் 20 விழுக்காடு இடம் பெற்றுள்ளனர் என்றும், இது இந்தியர்கள் பினாங்கு மாநிலத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்றும் தமது துணைவியாருடன் விருதளிப்பு சடங்கில் கலந்து கொண்ட ஆட்சிக்குழு டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

சமயப் பணிகளுக்காக பிறை, ஜாலான் பாரு, பிறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் மேஜர் டத்தோ சேகரன் முனியாண்டிக்கு டத்தோ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

மலேசிய புள்ளிவிவரத் துறையின் பினாங்கு மாநில அலுவலகத்தை சேர்ந்த ஜெசிகா நீதியா மைக்கல் பொதுச் சேவைத்துறையில் ஆற்றிய பணிக்காக அவருக்கு பி.ஜே.கே. விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜோதி இளம்பெரு வழுதியின் சமூகவியல் சேவைக்காக அவருக்கு பி.ஜே.கே. விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸான கிம்மா கட்சியின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவரும், பினாங்கு மாநில கிம்மா தொடர்புக் குழுவின் செயலாளருமான ரைஸ் அகமட் பின் ஹாஜி முகமது உசேன் ஆற்றிய சமூகவியல் பணிக்காக பி.ஜே.கே. விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

சமூகவியல் மற்றும் பொதுச் சேவைக்காக பினாங்கு சமூகவியல் இயக்கத்தின் பொருளாளர் முகமது அஸ்மான் பின் டத்தோ மேஜர் முகமது அப்துல் லத்தீப்பின் சேவையை பாராட்டி, அவருக்கு பி.ஜே.கே. விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதாக அவரின் தந்தை டத்தோ மேஜர் முகமது அப்துல் லத்தீப் அபூ தாஹிர் பெருமிதம் தெரிவித்தார்.

பினாங்கு ஆளுநரிடம் உயரிய விருதுகளைப் பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் 'திசைகள்' தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. உங்களின் மக்கள் நலச்சேவைகளும் சாதனைகளும் மென்மேலும் சிறந்து விளங்க எங்களது வாழ்த்துகள்!

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி