Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எதிர்த் திசையில் வாகனமோட்டிய ஆடவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எதிர்த் திசையில் வாகனமோட்டிய ஆடவர் கைது

குளுவாங், ஜூன்.9

குளுவாங், ஜாலான் ஜெயாவில் எதிர்த் திசையில் வந்த வாகனத்தின் மீது மோதிய போதைப்பொருள் உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய அந்த ஆடவர் தாமான் ஶ்ரீ குளுவாங்கில் இருந்து பண்டார் குளுவாங் நோக்கிச் சென்றபோது, திடீரென எதிர்த் திசைக்குச் சென்று 36 வயதுடைய வியாபாரி ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா காரின் மீது மோதியுள்ளார்.

புரோட்டோன் சாகா ஓட்டுநருக்கு லேசானக் காயங்கள் ஏற்பட்டதாகவும், சந்தேக நபருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் குளுவாங்மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார். சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் methamphetamine போதைப் பொருளை உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டதுடன், அவருக்கு மூன்று போதைப் பொருள் தொடர்பான குற்றப் பதிவுகளும் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →