May 22, 2026
Thisaigal NewsYouTube
இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு
தற்போதைய செய்திகள்

இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

Share:

சிராம்பான், மார்ச் 5 -

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா இராஜ இராஜஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்வு, வரும் மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்விற்கு தலைமையேற்று வழிநடத்துவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் இன்று ஆலயம் வந்து சேர்ந்துள்ளார்.

இன்று, ஆலயத்தில், திருவாசகத்தின் முதற்பதிகமான சிவபுராணம் பாராயணம் செய்யப்படுகிறது. 100 பேர் பத்து முறை என்ற அடிப்படையில் ஆயிரம் முறை சிவபுராணம் பாராயணம் செய்யப்படுவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வரும் வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு கால சிவ வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேல்விபரங்களுக்கு : 017-322 5400

Related News