May 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதிப்பா? முதலீட்டு அமைச்சு விசாரணை
தற்போதைய செய்திகள்

மலேசிய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதிப்பா? முதலீட்டு அமைச்சு விசாரணை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 04-

மலேசிய சேமிகண்டக்டர் தொடர்பான நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு விசாரணை நடத்தவுள்ளது.

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட 300 நிறுவனங்களில் மலேசிய நிறுவனமும் உள்ளதால் ஒருங்கிணைப்பு அமைப்பு என்ற முறையில் இந்த விஷயத்தை அமைச்சு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
பிரச்சினையை ஆழமாக புரிந்துகொண்டு உண்மையில் அவ்வாறு நடந்ததா என்பதை அமைச்சு கண்டுபிடிப்பது நல்லது என்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் இராணுவ விநியோகிப்பாளர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி வாஷிங்டன் கடந்த மாதம் தடை விதித்த 300 நிறுவனங்களில் மலேசியாவை தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் தயாரிப்பாளரான Jatronocs Sdn. Bhd. நிறுவனமும் அடங்கும் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

Related News