Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஒராங் அஸ்லி தலைவர் மற்றும் மலையேற்ற வீரரை ஏளனம் செய்த டிக்டாக் பயனர் மன்னிப்பு கோரினார்
தற்போதைய செய்திகள்

ஒராங் அஸ்லி தலைவர் மற்றும் மலையேற்ற வீரரை ஏளனம் செய்த டிக்டாக் பயனர் மன்னிப்பு கோரினார்

Share:

ஓராங் அஸ்லி கிராமத் தலைவர் மற்றும் மலையேற்ற வீரர் ஜஸ்லிந்தா சாலுடின் ஆகியோரை நேரலை ஒளிபரப்பில் ஏளனம் செய்த டிக்டாக் பயனர் ஒருவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பதிவேற்றப்பட்ட வீடியோவில், தனது பேச்சு ஓ ராங் அஸ்லி சமூகத்தினர் இடையே தப்பெண்ணத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட அவர், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், அது வெறும் கேலிப் பேச்சுதான் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, லுபுக் காஹாரு ஒராங் அஸ்லி கிராமத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட ஒராங் அஸ்லி கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News