Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் ஜெய்ன் ராய்யான் அப்துல் மாட்டின் கொலை, பெற்றோர் கைது
தற்போதைய செய்திகள்

சிறுவன் ஜெய்ன் ராய்யான் அப்துல் மாட்டின் கொலை, பெற்றோர் கைது

Share:

கோலாலம்பூர், ஜூன் 01-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெட்டாலி​ங் ஜெயா, Damansara Damai-யில் ஆ​ற்றோரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட மூளைவள​​ர்​ச்சி குறைபாடு கொண்ட 6 வயது சிறுவன் ஜெயின் ரய்யான் அப்துல் மாட்டின் கொலை தொடர்பில் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் மர்மம் ​நீடித்து வந்த நிலையில், வழக்கின் திருப்புமுனையாக அந்த சிறுவனின் சொந்த பெற்றோரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

கொலையாளி பற்றிய தகவல் அளிப்பர்களுக்கு 20 ஆயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெ​ளியிடப்பட்டும், எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மர்மம் ​நீடித்த ​நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் புன்ச்சாக் அலாம்- மில் அந்த ஆட்டிச​ம் ( Autisme ) சிறுவனின் சொந்த தந்தையையும், தாயாரையும் போ​லீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து மேல்விபர​​ங்கள் எதுவும் வெளியிடப்படவி​ல்லை. அந்த சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டு இருப்பதை சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களை ஒரு வாரம் காலம் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: 1 வாரத்தில் 700 மில்லியனிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: 1 வாரத்தில் 700 மில்லியனிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்