May 22, 2026
Thisaigal NewsYouTube
ஊழல் இருவர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஊழல் இருவர் கைது செய்யப்பட்டனர்

Share:

அரச மலேசிய கடற்படையின் ஒரு முகாம் சம்பந்தப்பட்ட குத்தகைத் தொடர்பில் ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான மேலும் இருவரை கைது செய்துள்ளது.

கடற்படையை சேர்ந்த ஓர் அதிகாரியும், நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

42, 55 வயதுடைய அவ்விருவரும் இன்று ஜோகூர், SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக SPRM குறிப்பிட்டுள்ளது..

Related News