Jun 9, 2026
Thisaigal NewsYouTube
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்
தற்போதைய செய்திகள்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

Share:

கோலாலம்பூர், மே.05-

புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி, கூட்டரசுப் பிரதேச போலீசின், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், அப்பதவியிலிருந்து அஸ்மி அபு காசிம் ஓய்வு பெற்ற பிறகு, இடைக்காலமாக அப்பொறுப்பை அதன் துணை இயக்குநர் ஃபிசோல் சாலே ஏற்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அப்பதவிக்கு யுஸ்ரி ஹசான் பஸ்ரி தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்பாக, புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவராக பொறுப்பு வகித்த யுஸ்ரி ஹசான், இவ்வாண்டு ஜனவரி மாதம், புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு