Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இரு அமைச்சர்களும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும்
தற்போதைய செய்திகள்

இரு அமைச்சர்களும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும்

Share:

மலாக்கா, ஜூன்.13-

பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வியுற்றதற்காகத் தங்களின் அமைச்சர் பதவியைத் துறந்துள்ள அதன் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி மற்றும் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் பதவியைத் துறப்பதற்கு முன்பு, அது குறித்து ஆழமாகச் சிந்திக்கும்படி அவ்விருவரையும் தாம் கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் தங்கள் முடிவைப் பரிசீலனை செய்வதற்கு இன்னமும் கால அவகாசம் திறக்கப்பட்டுள்ளதாகவும் பிகேஆர் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.

ரஃபிஸி ரம்லியும, நஸ்மி நிக் அஹ்மாட்டும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்பதே தமது விருப்பமாகும். அது குறித்து சிந்திப்பதற்கு அவர்களுக்குப் போதுமான கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

Related News