Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் அதிகாரி கைது

Share:

பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் போலீஸ் சீருடை அணிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

40 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் ஈப்போ, டூடா டோல் பிளாசா அருகிலுள்ள செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போலீஸ் ரோந்து பிரிவின் உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்நபர் போலீஸ் சீருடை அணிந்திருந்து சட்டவிரோதமாக செயல்பட்ட 14 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சந்தேகிக்கும் ஆடவர் யமஹா மோட்டார் சைக்கிளில் பயணித்து சாலையில் ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ய முயற்சித்த வேளையில் ரோந்து அதிகாரிகளால் அது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

காவல்துறை அதிகாரியைப் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 170 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்