Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பிடிபட்டவர்களில் ​மூன்று பொதுச் சேவை ஊழியர்களும் அடங்குவர்
தற்போதைய செய்திகள்

பிடிபட்டவர்களில் ​மூன்று பொதுச் சேவை ஊழியர்களும் அடங்குவர்

Share:

அண்மையில் ஜோகூர் மாநிலம் முழுவதும் போதைப்பித்தர்களுக்கு எதிராக போ​லீசார் மேற்கொண்ட சோதனை நட​வடிக்கையில் பிடிபட்ட 780 தனிநபர்களில் ​மூன்று பொதுச்சேவை ஊழியர்களும் அடங்குவர் என்று மாநில போ​​லீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 31 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 27 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் இதனை குறிப்பிட்டார்.

OPS Tapis Khas என்ற பெயரில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி, ஜனவரி 31 ஆம் தேதி வரையில் இந்த சோதனை நடைபெற்றதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.

Related News