Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த போலீஸ் மகள்
தற்போதைய செய்திகள்

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த போலீஸ் மகள்

Share:

லஹாட் டத்து, ஏப்ரல் 17-

சபா, லஹாட் டத்து, தாமான் தபானக்கிலுள்ள ஒரு வீட்டில் போலீஸ் அதிகாரியின் 14 வயது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில், சம்பந்தப்பட்ட வீட்டின் ஓர் அறையில் அச்சிறுமி சுயநினைவின்றி இருந்ததை அவரின் 16 வயது அக்காள் கண்டறிந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன்,பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயில், அச்சம்பவத்தின் போது, வீடு மாறுவது தொடர்பான விவகாரங்களைக் கவனிப்பதற்காக, கினபாத்தாங்கனில்இருந்ததாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

உயிரிழந்த சிறுமியைக் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளை காலை மணி 9க்கு உடற்கூறு ஆய்வு நடக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து சாட்சியிடமும் விளக்கம் பதிவு செய்யப்பட்டுவருவதால், விசாரணை நிறைவுபெறும் வரையில் யாரும் ஆருடங்களை முன்வைக்க வேண்டாமென ரசாருதீன் ஹுசைன் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்