Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 18-

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் - நட்மா தெரிவித்துள்ளது.

நேற்று ஆயிரத்து 319 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை மணி 6 அளவில் 759 பேராக குறைந்துள்ளது. Selangor-ரிலுள்ள 3 நிவாரண மையங்களில் 634 பேரும், நெகிரி செம்பிலான்-னில் 77 பேரும் மலாக்காவில் 48பேரும் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர்-ரிலுள்ள கிள்ளான் ஆறு, தெரெங்கானு-னிலுள்ள பேசுட் ஆறு ஆகியவற்றில் நீர் மட்டம் அபாய அளவில் பதிவாகியுள்ளது. அதேவேளையில், மலாக்கா-வில் டுயோங் ஆறு, நெகிரி செம்பிலான்-னில் லிங்கி ஆறு, சிலாங்கூர்-ரில்சுங்கை பூலோ மற்றும் கோலா சிலாங்கூர் ஆறுகள் முதலானவற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ளதாக, நட்மா அறிக்கையில் கூறியுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்