Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பி.ஏ.பி தொகை மீண்டும் பெற்றோர்களுக்கு சென்றடைய வேண்டும் - கல்வி அமைச்சர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பி.ஏ.பி தொகை மீண்டும் பெற்றோர்களுக்கு சென்றடைய வேண்டும் - கல்வி அமைச்சர் வலியுறுத்து

Share:

பள்ளி அமர்வுக்கான ஆரம்பக் கல்வி உதவி (BAP) தொகையினை கழிக்கின்ற எந்தவொரு பள்ளிகளும் மீண்டும் அப்பணத்தை பிள்ளைகளின் பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சகம் கேட்டு கொண்டது.

அரசாங்கம் பெற்றோர்களுக்கு வழங்குகின்ற 150 வெள்ளி பிஏபி முழுமையாக அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஏதெனும் புகார்கள் இருந்தால் அதை கூறும்படி கேட்டு கொள்வதுடன் அதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

அத்தொகை மீண்டும் பெற்றோர்களுக்கு சென்றடைய செய்வதே சரியாகும் என்று தேசிய உயர்நிலைப் பள்ளி யு ஹுவா - வில் சிலாங்கூர் அளவிலான சீனப்புத்தாண்டு கொண்டாட்ட விழா மற்றும் பிஏபி காசோலையை வழங்கும் பொழுது இன்று ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

Related News

பி.ஏ.பி தொகை மீண்டும் பெற்றோர்களுக்கு சென்றடைய வேண்டும் -... | Thisaigal News