Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மூன்று நாள் தேடுதல் வேட்டைக்குப் பின் ஆடவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

மூன்று நாள் தேடுதல் வேட்டைக்குப் பின் ஆடவர் சடலம் மீட்பு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.25-

பினாங்கு இரண்டாவது பாலமான Sultan Abdul Halim Muadzam Shah- பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில், இன்று ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பத்து காவானிலிருந்து பினாங்கு தீவு நோக்கிச் செல்லும் பாதையில், பாலத்தின் 12.8 கிலோமீட்டர் அருகே சடலம் மிதப்பதாக பிளஸ் நிறுவனத்தின் ரோந்துப் படையினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.

கடந்த திங்கட்கிழமை பாலத்தின் ஓரத்தில் கார் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கடல்சார் போலீஸ் மற்றும் பொது தற்காப்புப் படையினர் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட சடலம், மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்