Jul 27, 2026
Thisaigal NewsYouTube
எதிர்திசையில் மைவி காரை செலுத்திய வயோதிக ஆடவர் போலீசில் சரணடைந்தார்
தற்போதைய செய்திகள்

எதிர்திசையில் மைவி காரை செலுத்திய வயோதிக ஆடவர் போலீசில் சரணடைந்தார்

Share:

குவாந்தான், ஏப்ரல் 22-

பகாங், குவாந்தான்-னில் கடந்த வெள்ளிக்கிழமை, சாலையின் எதிர்தடத்தில் ஆபத்தான முறையில், பெரோடுவா மைவி ரக காரை ஓட்டிச்சென்ற 71 வயது வயோதிக ஆடவர் போலீசில் சரணடைந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உடல் சுகாதார பிரச்னையை அவர் கொண்டுள்ளதும் வாகனத்தைச் செலுத்துவதற்கான உடல்நிலையில் இல்லாததும் கண்டறியப்பட்டுள்ளதாக, குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.

தனது மகனுக்கு சொந்தமான காரை, அந்த வயோதிகர் ஆபத்தான முறையில் ஓட்டிச்செல்லும் காணொளி பேஸ்புக்கில் வைரலானதை அடுத்து, 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்நபர் மீது போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விதிமுறையை மீறிய குற்றத்திற்காக, அவருக்கு அபராத குற்றப்பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் வான் மோஹட் சஹாரி மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்