Sep 28, 2026
Thisaigal NewsYouTube
அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை
தற்போதைய செய்திகள்

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

Share:

அம்பாங், தாமான் புத்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாகக் குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று நேற்று மாலை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.27 மணியளவில் ஆடவர் ஒருவர் தனது வீட்டின் முன்பாக அக்குழந்தையைக் கண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண் குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ஆசாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 317-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் செய்தவருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்