Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் 10 பேர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் 10 பேர் படுங்காயம்

Share:

கூலாய், ஏப்ரல் 03-

கூலாய், வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 36.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரியுடன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகியதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 6.28 மணியளவில் இவ்விபத்துக் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக கூலாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் பய்ருஸ் ஹில்மி மோஹட் ஹில்மி கூறினார்.

33 வயதுடைய பேருந்து ஓட்டுநரின் இடது கால் இருக்கையில் சிக்கி கொண்டதுடன் பேருந்தில் பயணித்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக பய்ருஸ் ஹில்மி அறிவித்தார்.

விபத்தில் சிக்கிய 30 வயதுடைய நான்கு பெண்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பய்ருஸ் ஹில்மி மேலும் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி 8 பயணிகளுடன் பயணித்த அந்த சுற்றுலா பேருந்து லாரியுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்