Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில ஆலயங்களுக்கு கணபதி ராவ் மானியம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில ஆலயங்களுக்கு கணபதி ராவ் மானியம்

Share:

சிலாங்கூரில் உள்ள 63 இந்து ஆலயங்களுக்கு எட்டு லட்சத்து பத்தாயிரம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டது. ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் ஆலயப் பொறுப்பாளர்களிடம் இந்த மானியத்தை வழங்கினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு இவ்வாண்டில் மொத்தம் 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில் அதில் 23 லட்சம் வெள்ளி இந்து ஆலயங்களுக்கு வழங்கப் பட்டதாக அவர் சொன்னார்.

பக்கத்தான் கூட்டணி கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றிய பின்னர் முஸ்லிம் அல்லாத சமயங்களுக்கு லீமாஸ் எனப்படும் செயல் குழுவை அமைத்து அதன் வாயிலாக மானியம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தியது என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

அதன் படி இந்து ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆலயங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது மற்றும் சமய நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த மானியம் வழங்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஆலயங்களுக்கு மானியம் 18 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது. இவ்வாண்டு முதல் ஆலயங்களுக்கு மானியம் 23 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கணபதிராவ் சுட்டிக்காட்டினார்.

Related News