Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடுவிப்பு

Share:

மாதுவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அமான கட்சியின் முன்னாள் பெர்மாத்தாங் பசிர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபட்சில், குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர், வழக்கிலிருந்து தப்போது விடுவிக்கப்பட்டாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கும். எதிர்காலத்தில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் புதிய ஆதாரங்களுடன் அவரை மீண்டும் குற்றஞ்சாட்ட முடியும் என்ற ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முஹம்மது ஃபைஸ், ஸின் பிரதிநிதித்துவ மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக மாஜிஸ்திரேட் முகமது சுஃபியன் ஜாபர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சன்வே பிராமிட் டிலிருந்து சுபாங் ஜெயாவிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது தனது அருகில் அமர்ந்திருந்த 31 வயது மாதுவை மானபங்கம் செய்ததாக முஹம்மது ஃபைஸ், குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News