சுமார் எட்டு லட்சத்து 75 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான செமினி தோட்டத் தமிழ்ப் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகையாளர்களாக கல்வியமைச்சு தங்களை நியமித்துள்ளதாக பள்ளியின் மேலாளர் வாரியத்தை நம்ப வைத்து மோசடி புரிந்ததாக இரு குத்தகையாளர்களுக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
40 வயது முகமது ஷாபிக் முகமது 40 மற்றும் 48 வயது சியா செங் நாம் என்ற அந்த இரு குத்தகையாளர்கள் நீதிபதி ரோஸினா ஆயோப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
எட்டு லட்சத்து 75 ஆயிரம் வெள்ளியை பெறுவதற்காக செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத்தை நம்பவைத்ததாக அவ்விருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 ஆம் தேதிக்கும் அக்டோபர் 8 தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தாமான் மீடாவில் உள்ள ஆர்.எச்.பி. வங்கியில் அவ்விருவரும் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் பத்தாண்டு
வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
இதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் தலா 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தற்போதைய செய்திகள்
செமினி தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்திடம் வெ.875,000 மோசடி- இரு குத்தகையாளர்கள் மீது குற்றச்சாட்டு
Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


