Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் பல்லின கலாச்சாரம் குறித்த போதனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் பல்லின கலாச்சாரம் குறித்த போதனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 29-

பள்ளிகளில் பல்லின கலாச்சாரங்கள் தொடர்பான போதனையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். அது தொடர்பான நூல்களை வாசிப்பதன் வழி, வருகின்ற தலைமுறையினரிடையே, ஒருவரை ஒருவர் நன்முறையில் புரிந்துக்கொள்ளும் போக்கை வளர்க்க முடியும் என மனித உரிமை அமைப்பான புசாட் கொமாஸ் வலியுறுத்தியுள்ளது.

மக்களிடையே எளிதில் இனம் மற்றும் சமயம் தொடர்பான விவகாரங்களை தூண்டிவிட்டு, அவர்களிடம் விரோத போக்கை ஏற்படுத்தும் செயல்களை முறியடிக்க அந்நடவடிக்கை அவசியமானதாகும் என்று அந்த அமைப்பின் இயக்குநர் ராயன் சுவா தெரிவித்தார்.

ஸ்வீடன், நியூசிலாந்து போன்ற நாடுகளில், சிறார்களிடம் கலாச்சாரம் மற்றும் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதை முன்மாதிரியாகக் கொண்டு, மலேசிய அரசாங்கமும் அவ்வாறு செயல்படுவது அவசியம் என்றாரவர்.

இதற்கு முன்பு, நாட்டிலுள்ள பல்லின சமயம் மற்றும் இனங்களின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகின்ற நூல்களை வாசிக்கும் கலாச்சாரம், சிறார்களிடையே வளர்க்கப்பட வேண்டுமென தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் பரிந்துரையை முன்வைத்திருந்தார்.

அது குறித்து கருத்துரைத்த ராயன் சுவா, நாட்டில் இனங்களிடையிலான ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் சிறு நெப்போலியன்-கள் போன்ற தரப்பினரின் செயல்களுக்கு தடைவிதிக்கும் வகையில் அரசாங்கம் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்