Mar 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு டிஏபி தேர்தல் முடிவு எதிரொலி : லிம் குவான் எங்குடன் கருத்துவேறுபாடா? அந்தோணி லோக் மறுப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கு டிஏபி தேர்தல் முடிவு எதிரொலி : லிம் குவான் எங்குடன் கருத்துவேறுபாடா? அந்தோணி லோக் மறுப்பு

Share:

பினாங்கு, நவ.15-


கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற பினாங்கு மாநில டிஏபி தேர்தல் முடிவின் எதிரொலியினால் கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங்குடன் தமக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.

அதேவேளையில் பினாங்கு டிஏபி தேர்தலில் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தம்முடைய தலையீடு அதிகமாக இருந்ததாக கிளை ஒன்றின் பேராளர் ஒருவர் பகிரங்கமாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டையும் அந்தோணி லோக் மறுத்தார்.

பினாங்கு டிஏபி தேர்தலில் ஒரு வழிகாட்டலை மட்டுமே தாம் வழங்கியதாகவும், தேர்தலில் தம்முடைய எந்தவொரு தலையீடும் இருந்ததில்லை என்றும் அந்தோணி லோக் விளக்கினார்.
பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யக்கூடிய முக்கிய தேர்தலாக டிஏபி மாநிலத் தேர்தல் அமைந்தது.

பினாங்கு டிஏபி தேர்தலில் அந்தோணி லோக்கின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் புக்கிட் மெர்தாஜம் எம்.பி.யான மனித வள அமைச்சர் ்ஸ்டீவன் சிம்- மிற்கும், டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் புதல்வியும், டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் சகோதரியுமான துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங்- கிற்கும் கடும் போட்டி இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பினாங்கு மாநில டிஏபி.யை வழிநடத்தவதற்கு சிம்- லிம் என்ற வியூகத்தை முன்வைக்கப்பட்டாலும் அதனை உறுப்பினர்கள் ஆதரிக்கப்படாத பட்சத்தில் அந்த வியூகத்தினால் எதுவும் செய்ய இயலாது என்ற அந்தோணி லோக் விளக்கினார்.

பினாங்கு தேர்தலில் இவரைதான் ஆதரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் தாம், யாரிடமும் பிறப்பிக்கவில்லை என்றாலும் மாநில டிஏபி , எதை நோக்கி சென்றால், அதன் இலக்கை முடியம், அதன் பலாபலனை எதிர்பார்க்க முடியும் என்ற வியூகத்தை மட்டுமே தமது உரையில் முன்வைத்தாக அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

பினாங்கு மாநில தேர்தலில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்
மாநில டிஏபி தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் லிம் குவான் எங்கின் சகோதரி லிம் ஹுய் யிங் , முன்பு வகித்த அதே பதவியான மாநில டிஏபி செயலாளருக்கு நியமிக்கப்பட்டார்.

Related News