Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையில் ஈடுபட்ட இரு போலீஸ் அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட இரு போலீஸ் அதிகாரிகள் கைது

Share:

கடந்த பிப்ரவரி முதல் தேதி கோலத்திரெங்கானு அருகில் Gong Badak என்ற இடத்தில் 5,150 வெள்ளி இழப்பு ஏற்படும் அளவிற்கு வழிபறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ASP அந்தஸ்தை கொண்ட போலீஸ் அதிகாரியும், சார்ஜன் அந்தஸ்தை கொண்ட போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டனர்.

36 வயதுடைய அந்த சார்ஜன், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வேளையில் 42 வயதுடைய அந்த ASP அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.

எண்ணெய் நிலையத்தில் தன்னை மிரட்டி அந்த இரு போலீஸ்காரர்களும் வங்கியின் ATM இயந்திரத்திலிருந்து 5 ஆயிரம் வெள்ளி ரொக்கத் தொகையை எடுக்க சொல்லி, அந்த பணத்தை பறித்துச் சென்றதாக 34 வயதுடைய நபர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த இரு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டதாக டத்தோ மஸ்லி மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News