May 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

இரண்டாவது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

அரச பிரமுகர் ஒருவரின் உடன் செல்லும் மெய்க்காவலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாற்றுத்திறனாளி ஒருவர், இரண்டாவது வாக்குமூலத்தை பதிவு செய்தவதற்கு இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவரான 46 வயது ஓங் இங் கியோங் என்ற அந்த மாற்றுத் திறனாளியுடன் Lawyers For Liberty அமைப்பின் வழக்கறிஞர் N. சுரேந்திரன் மற்றும் முன்னாள் SPRM தலைமை ஆணையரும், வழக்கறிஞருமான லதீபா கோயா ஆகியோர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்திற்கு வந்திருந்தனர்.

e- hailing வாகன ஓட்டுநரான அந்த மாற்றுத் திறனாளி, கடந்த மே 28 ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு ஹோட்டலின் முன் தனது காரை நிறுத்தியிருந்த போது, அந்த காரை அகற்றுமாறு அந்த அரச பிரமுகரின் மெய்காவலர் பிறப்பித்த உத்தரவை காதில் வாங்கிக்கொள்ள முடியாமல், வெறுமனே நின்று கொண்டு இருந்த போது, அந்த மெய்காவலரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News