May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச காணொளியின் மூலம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வெ. 44,500 இழப்பு
தற்போதைய செய்திகள்

ஆபாச காணொளியின் மூலம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வெ. 44,500 இழப்பு

Share:

தனது ஆபாச காணொளி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக கூறி மிரட்டிய வெளிநாட்டு பெண்ணிடம் ஓய்வுபெற்ற அரசு பணியாளர் ஒருவர் 44,500 வெள்ளியை இழந்தார்.

பாதிக்கப்பட்ட 61 வயது அந்த ஓய்வுபெற்ற அரசு பணியாளர் தம்மை தொடர்புடைய காணொளி வைரலாகுவதை தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடம் குறிப்பிட்ட தொகையை செலுத்த ஒப்புக் கொண்டதாக Jempol போலீஸ் தலைவர் Hoo Chang Hook தெரிவித்தார்.

Ayuni Seri என்ற பெயரில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட அப்பெண் கடந்த ஜூன் 3 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் உடலில் ஆடையின்றி பாதிக்கப்பட்ட பெரியவருக்கு video call செய்ததாகவும், அந்த பெரியவரையும் நிர்வாணமாக ஒரு நிமிடம் நிற்பதற்கு வலியுறுத்தியதாகவும் Hoo Chang Hook கூறினார்.

அதைத் தொடர்ந்து, அந்த காணொளியை தமது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பணம் கொடுக்காவிட்டால் அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துவிட போவதாக மிரட்டியுள்ளார்.

பிறகு, பாதிக்கப்பட்ட அப்பெரியவர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரையில் நான்கு வெவ்வேறு கணக்கு வங்கிகளில் அப்பெண்ணுக்கு பணத்தை அனுப்பியதுடன் தொடர்ந்து அப்பெண் பணத்தை கோரி மிரட்டிய வேளை போலீசில் புகார் செய்ததாக Hoo Chang Hook குறிப்பிட்டார்.

Related News