May 22, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகிக்கும் அந்த ஐந்து நபர்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சந்தேகிக்கும் அந்த ஐந்து நபர்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

Share:

பாலியல் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐந்து நபர்கள் இன்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

17 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் பண்டார் பாரு பாங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸ் செய்திருந்த விண்ணப்பத்தை அடுத்து, தொடர்ந்து தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட்நூர்தியானா முகமது நவாவி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும், பல ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டு காணொளிகளை சமூக ஊடகங்களில் விற்றதாகவும் 27 வயது பெண் ஒருவர் பாங்கி, பண்டார் புக்கிட் மகோத்தா -வில் உள்ள அவரது சொகுசு இல்லத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

450 வெள்ளி முதல் 550 வெள்ளி வரையில் பணம் செலுத்தி தெலிகிராம் அகப்பக்கத்தில் இணைவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவித்ததாகவும் சம்பந்தப்பட்ட பெண் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

Related News