Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கடன்பட்டிருப்பது உண்மையே ஆனால், ஆ லோங்கிடம் அல்ல
தற்போதைய செய்திகள்

கடன்பட்டிருப்பது உண்மையே ஆனால், ஆ லோங்கிடம் அல்ல

Share:

சிலாங்கூர், மே 04-

ஒரு வர்த்தகர் என்ற முறையில் தாம் கடன்பட்டு இருப்பது உண்மையே. ஆனால், வட்டி முதலைகளிடம் அல்ல என்று கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் கைருல் அஸ்ஹரி சௌத் இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Ah Long என்று கூறப்படும் சட்டவிரோத வட்டி முதலைகளிடம் தாம் கடன் பெற்று இருப்பதாகவும், தம்முடைய ATM வங்கி அட்டையை வட்டி முதலைகள் பிடித்து வைத்திருப்பதாகவும் போன்ற ஓர் அவதூறான பிரச்சாரத்தை இந்த இடைத் தேர்தலில் எதிர்தரப்பினர் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், நம்பகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்ற தீய நோக்கில் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்..

நேற்று கெர்லிங்கில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, நிருபர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு தாம் பதில் அளிக்காததற்கு முக்கிய காரணம், தேவையற்ற விவகாரங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பதே தவிர பதில் அளிக்க முடியாது என்பது அல்ல என்று கைருல் அஸ்ஹரி சௌத் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்