Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டை ஓர் இந்தியப் பிரஜை குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டை ஓர் இந்தியப் பிரஜை குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

கடந்த வாரம், அம்பாங், பண்டான் இண்டாவில் உள்ள மெடான் செலெரா உணவு மையத்தில் இரண்டு வயது பெண் குழந்தையிடம் ஆபாச செயலில் ஈடுபட்டதாக ஓர் இந்தியப் பிரஜை, அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தல் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு சமையல்காரரான 34 வயது கே. செந்தில்நாதன் என்ற அந்த இந்தியப்பிரஜை, அச்சிறுமியை உரசியவாறு வக்கிரச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சசாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நோர்ஷிலா கமருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இந்தியப் பிரஜை, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை இரு நபர்கள் உத்தரவாதத்துடன் 12 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தார்.

Related News