Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

Share:

கிளாந்தான் மாநிலத்தில், சலுகை விலை பெட்ரோலை, தாய்லாந்துக்கு கடத்த முயன்றதாக நம்பப்படும் மூன்று தாய்லாந்து நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், மூன்று சந்தேக நபர்கள் கடந்த புதன்கிழமை காலை 7.30 மணியளவில் ரந்தாவ் பாஞ்சாங் டோல் சாவடியின், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின் கிளந்தான் கிளை தெரிவித்துள்ளது.

35 முதல் 56 வயதுக்குட்பட்ட அம்மூவரும், புரோட்டான் வாஜா கார்கள் மூலம் மொத்தம் 160 லிட்டர் பெட்ரோலை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News