May 22, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் ஹாஜி பெருநாளையொட்டி  இன்று பெரு‌ம்பாலான  பள்ளிவாசல்களில் அரச தலைவர்கள் யாத்ரீகர்கள் நிரம்பியுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் ஹாஜி பெருநாளையொட்டி இன்று பெரு‌ம்பாலான பள்ளிவாசல்களில் அரச தலைவர்கள் யாத்ரீகர்கள் நிரம்பியுள்ளனர்

Share:

இன்று திங்கட்கிழமை, ஹாஜி பெருநாளையொட்டி பெரும்பாலான பள்ளிவாசல்களில் அரச தலைவர்கள் உட்பட யாத்ரீகர்கள் நிரம்பியுள்ளனர்.

Allah - வின் மகத்துவத்தை புகழ்ந்து தக்பீர் ஓதுவதற்கும் ஹாஜி தொழுகையை நிறைவேற்றுவதற்கும் அனைவரும் ஒன்றுக்கூடியுள்ளனர்.

பிரதமர் Dato Sri Anwar Ibrahim மற்றும் அவரின் துணைவியார் Datuk Seri Dr Wan Azizah Wan Ismail உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இன்று காலை Putrajaya - வில் உள்ள Putra பள்ளிவாசலில் ஹாஜி தொழுகையை நிறைவேற்றினர்.

Imam Besar Ehsan Mohd Husni - யின் தலைமையிலான தேசிய பள்ளிவாசலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் ஹாஜி பெருநாளை சிறப்பாக தொடக்கி வைத்தனர்.

இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் அதன் அமைச்சர்கள் உட்பட யாத்ரீகர்கள் பள்ளிவாசல்களில் ஒன்றுக்கூடி ஹாஜி பெருநாளை இன்று வரவேற்றனர்.

Related News