Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தின் மீது செம்பனை மரம் விழுந்ததில் வயோதிகர் காயம்
தற்போதைய செய்திகள்

வாகனத்தின் மீது செம்பனை மரம் விழுந்ததில் வயோதிகர் காயம்

Share:

பினாங்கு, மார்ச் 27-

பினாங்கு, நிபோங் தெபால், ஜாலான் சுங்கை டூரி-யில் 65 வயது வயோதிக பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது செம்பனை மரம் சரிந்து விழுந்ததில், அவர் படுங்காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மாலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கடும் காயத்திற்கு ஆளாகிய நோர் ஐனி சேனாப்பி - வை பொதுமக்கள் சுங்கை பக்காப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக அந்த செம்பனை மரம் சாய்ந்ததாக கூறிய நிபோங் தெபால் தீயணைப்பு மீட்பு படையின் மூத்த அதிகாரிமுஹம்மது பய்ஜால் யூசோப், அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வயோதிக பெண் செலுத்திய ஹோண்டா ஜேஸ் வாகனம் சேதமடைந்திருப்பதாக கூறினார்.

பின்னர், பிரத்தியேக உபகரணங்களை கொண்டு தீயணைப்பு மீட்பு படையினர், சரிந்து விழுந்த மரத்தை வெட்டி, அங்கிருந்து அம்மரத்தை அப்புறப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்