ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்களை அமெரிக்க திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.
புதிய விதிப்படி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட நடிகர்கள் மற்றும் AI மூலம் எழுதப்பட்ட திரைக்கதைகள் இனி ஆஸ்கார் விருதுகளுக்குத் தகுதி பெறாது.
நடிப்பு மற்றும் திரைக்கதை பிரிவுகளில் மனிதர்களால் நேரடியாக உருவாக்கப்பட்ட படைப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், தேவையானால் படைப்பில் AI பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து கூடுதல் விளக்கம் கோரப்படும் என்றும் அகாடமி தெரிவித்துள்ளது.
திரைப்படத் துறையில் AI பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மனித கலைஞர்களின் படைப்பாற்றலை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த புதிய விதிகள் 2027-ஆம் ஆண்டுக்கான அடுத்த ஆஸ்கார் விருதளிப்பு விழாவிலிருந்து அமலுக்கு வரும்.








