Sep 25, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக  சமூக நீதி கூட்டணியில் இணைந்தது மலேசியா
தற்போதைய செய்திகள்

அனைத்துலக சமூக நீதி கூட்டணியில் இணைந்தது மலேசியா

Share:

சமூக நீதி மற்றும் அனைத்துலக தொழிலாளர் தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில், அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.வின் ‘சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியில்’ மலேசியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. மலேசியாவின் இந்த பங்களிப்புக் கடிதத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், ஐ.எல்.ஓ. தலைமை இயக்குநர் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் இன்று சமர்ப்பித்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் 114-வது அனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஐ.எல்.ஓ.வின் கொள்கைகளுக்கு ஏற்ப, தொழிலாளர் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மலேசியா கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

மேலும், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் தொழில்துறை உறவுகளை வலுப்படுத்த இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்