Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 05-

ஜொகூர், கோத்தா திங்கி-யில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் கடும் காயங்களுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று மாலையில் ஜாலான் கோத்தா திங்கி - குலுவாங் சாலையில் 57.5ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர் ஓட்டிச் சென்ற பேரோடுவா மைவி-யும் 41 வயது பயணியுடன் சென்ற 42 வயதுடைய ஆடவர் செலுத்திய புரோட்டான் எக்சோரா-வும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக, கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் ஹஸ்ஸின் சமோரா கூறினார்.

புரோட்டான் எக்சோரா வாகனத்தில் வந்த இருவருக்கும் முகம் உட்பட உடலில் சொற்ப காயங்களே ஏற்பட்டிருந்த வேளையில் அம்மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிரிழந்த மாணவரின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஹஸ்ஸின் சமோரா தெரிவித்தார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸ் விசாரணையை முடுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

சாலை விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார் | Thisaigal News