Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு

Share:

போலி துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ளையிட்டு வந்ததாக ஒரு முன்னாள் போலீஸ்காரர் உட்பட மூன்று நபர்கள் மலாக்கா, ஆயேர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டுள்ளனர்.

ஒரு முன்னாள் போலீஸ்காரரான 33 வயது முகமது ஃபிர்தௌஸ் முஹமட் நார், 38 வயது அப்துல் ஹயாத் ஃபிர்தௌஸ்மற்றும் 36 வயது முகமது கைரி முகமது நூர் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்கள் ஆவர்.

இந்த மூவரும் கடந்த மே 7 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா, தாமான் செரி தெலோக் மாஸ் என்ற இடத்தில் போலி துப்பாக்கி முனையில் ஒரு நபரை மடக்கி, ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News