May 22, 2026
Thisaigal NewsYouTube
47, 003 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன, இரு பேருந்து ஓட்டுநர்கள் கைது
தற்போதைய செய்திகள்

47, 003 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன, இரு பேருந்து ஓட்டுநர்கள் கைது

Share:

கடந்த ஜூன் 10 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட‌ Ops Hari Raya Aidiladha திடீர் சோதனையில் மொத்தம் 47,003 நோட்டீஸ்களை சாலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளன.

இதில் மொத்தம் 209,037 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 1,462 கார், 192 மோட்டார் சைக்கிள் மற்றும் 113 இதர வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சாலை போக்குவரத்து துறையின் மூத்த இயக்குநர் Muhammad Kifli Ma Hassan கூறினார்.

ஓட்டுநர் உரிமமின்றி வாகனத்தை பயன்படுத்துதல், காலாவதியான மோட்டார் சைக்கிளின் உரிமம், மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் ஆகிய குற்றங்களுக்காக அதிகமான நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக Muhammad Kifli தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக சந்தேகிக்கும் 42 மற்றும் 61 வயதிற்கு உட்பட்ட இரண்டு விரைவு பேருந்து ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதாக Muhammad Kifli கூறினார்.

Related News