வாகனம் ஒன்றிலிருந்து மிகப்பெரிய அளவில் சிலாங்கூர் மாநில போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கோடியே 49 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள 451.215 கிலோ கிராம் Methamhetamine வகையை சேர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12.55 மணியளவில் ரவாங் அருகில் ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்திய போது மிகப்பெரிய அளவில் போதைப்பொருளை கைப்பற்ற முடிந்ததாக இன்று ஷா ஆலாம், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் Datuk Hussein Omar இதனை தெரிவித்தார்.
அந்த போதைப்பொருளை ஏற்றிச்சென்று 22 மற்றும் 33 வயதுடைய இரு நபர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இந்த போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க முடிந்ததாக Datuk Hussein Omar குறிப்பிட்டார்.








