பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஹரி ராயா பொது உபசரிப்புகள், பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் திரெங்கானு, கிளந்தன் மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன.
மலேசிய வரலாற்றில் பிரதமர் ஒருவரின் ஹரிராயா பொது உபசரிப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் பொது உபசரிப்பு, கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார், ஹோட்டல் ரஹிய வில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். கிளந்தானில் மே 12 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் முஹம்மாட் அரங்கில் நடைபெறும்.
திரெங்கானுவில் மே 13 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் டேவான் முக்தஃபி பில்லா ஷா மண்டபத்தில் நடைபெறும் என்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


