May 22, 2026
Thisaigal NewsYouTube
TVET கல்வியில் சேரும்படி துணைப்பிரதமர் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

TVET கல்வியில் சேரும்படி துணைப்பிரதமர் அறிவுறுத்து

Share:

2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இவ்வாரம் முற்பகுதியில் வெளியான நிலையில் இத்தேர்வை எழுதத் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்து 160 எஸ்.பி.எம் மாணவர்கள், தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வியான TVET-டில் இணைந்து தங்கள் கல்வியை தொடருமாறு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்தின் மனித வள தேவைக்கு ஏற்ப இக்கல்வியில் இணைந்து மாணவர்கள் பயில்வது மூலம் தொழில்கல்வியை கற்றுக்கொள்வற்கான வாய்ப்பு உள்ளன.

TVET கல்வியில் சேர்ந்து பயில்வதற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு எஸ்.பி.எம் தேர்வை எழுதத் தவறிய பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு TVET மன்றத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News