Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும்

Share:

போர்ட்டிக்சன் வட்டாரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தனது தந்தையின் பாலியல் பலாத்கார செயலினால் பாதிக்கப்பட்டு வந்த 20 வயது பெண்ணுக்கு நல்லுரைகள் வழங்கப்பட்டு, அந்த கசப்பான சம்பவத்திலிருந்து மீள்வதற்கு உயரிய வழிகாட்டல்கள் வழங்கப்படும் என்று நெகிரி செம்பிலான் மாநில சமூக நல இலாகா அறிவித்துள்ளது.

தற்போது மனபாதிப்பில் இருக்கும் அந்தப் பெண்ணின் தேவையை அடிப்படையாக கொண்டு அவருக்கு நல்லுரை சேவைகள் வழங்கப்படும் என்று மாநில சமூக நல இலாகாவின் இயக்குநர் ரோஸ்னா சர்டி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தற்போது உறவுக்காரர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து எம்மாதிரியான பாதுகாப்பு வழங்கப்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

தனது 12 வயதிலிருந்து தந்தையின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருவதாகவும், இரண்டு பிள்ளைகளை பிரசவித்து இருப்பதாகவும் அந்தப் பெண் கடந்த மே முதல் தேதி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தையின் வக்கிர செயல் அம்பலமானது.

தாம் பிரசவித்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் இறந்து விட்டதாகவும், மற்றொருவரான 3 வயது பெண் பிள்ளை உயிருடன் இருப்பதாகவும் அந்தப் பெண் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்