Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம்
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, முழுமையாக விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரின் குடும்பதினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நஜீப்பின் தண்டனை காலம் 6 ஆண்டு காலமாக குறைக்கப்பட்டதில் அவரின் குடும்பத்தினருக்கு உடன்பாடுயில்லை. தமது தந்தையார் நஜீப்பிற்கு வழங்கப்பட்டு இருப்பது முழு மன்னிப்பு அல்ல என்று அவரின் மகள் நூரியானா நஜ்வா தெரிவித்துள்ளார்.

என் தந்தைக்கு கருணைக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், முழு மன்னிப்பு வழங்கப்படவில்லை என்று நூரியானா நஜ்வா தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

எனினும் நஜீப், எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை என்பது தங்களின் நிலைப்பாடாகும் என்று அவரின் குடும்பதினர் மீண்டும் வயுறுத்தியுள்ளனர்.

Related News