Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஃபேரி மற்றும் பேருந்து பயண அட்டை ஒருங்கிணைக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

ஃபேரி மற்றும் பேருந்து பயண அட்டை ஒருங்கிணைக்கப்படலாம்

Share:

பினாங்கில் இன்று செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள புதிய ஃபேரி-க்கான பயணக் கட்டண அறிமுகத்தில் பேருந்துக்கான பயணக் கட்டண சேவையையும் ஒருங்கிணைப்பது குறித்து மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

ஒரே பயணக் கட்டண அட்டையில் ஃபேரி சேவை மற்றும் பேருந்து சேவை ஆகியவற்றை உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஃபேரி-க்கும் பேருந்துக்கும் வெவ்வேறு கட்டண முறை அவ்விரு சேவைகளையும் பயன்படுத்தும் பயணிகளுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவ்விரு கட்டணத்தையும் ஒரே அட்டையில் இணைப்பதுக் குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஜைரில் கிர் குறிப்பிட்டார்.

Related News